பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயப்படுத்தலாமா ?

51

குழந்தை இந்த உலகத்திற்கு வந்து சில வருஷங்கள் தானாகின்றன. அதற்கு இங்குள்ள பொருள்களெல்லாம் புதியவை. அவற்றையெல்லாம் பார்க்க அதற்கு அளவு கடந்த ஆசை. அந்த ஆசையைக் கூடியவரை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதன் அறிவு நன்றாக விரிவடையும். ஆராய்ச்சி மனப்பான்மை குழந்தைக்கு உண்டு. அதை வளர்க்க நாம் உதவ வேண்டும்.

பிறந்தது முதற்கொண்டே பய உணர்ச்சியைப் பல வகைகளில் நாம் குழந்தைக்கு உண்டாக்கி விடுகிறோம். இருட்டறையில் குழந்தை தூங்கக் கூடாது என்கிறோம். இருட்டிலே போகக் கூடாது என்று தடுத்து விடுகிறோம். குழந்தை தூங்காமல் தொந்தரவு கொடுத்தால், "உஸ்உஸ்! அதோ பூனே வருகிறது” என்று பயமுறுத்தி மியாவ் மியாவ் என்று சத்தமும் போடுகிறோம். இல்லாவிட்டால், "அதோ இரண்டு கண்ணன் வருகிறான், அதோ போலீஸ்காரன் வருகிறான், உன்னேப் பிடித்துக் கொண்டு போய் விடுவான். கண்ணே மூடிப் படுத்துக் கொள்” என்று மிரட்டுகிறோம்.

இப்படிப் பல வழிகளில் நாம் குழந்தைகளைப் பயங்கொள்ளிகளாகச் செய்துவிடுகிறோம். இது மிகப் பெரிய தவறு. குழந்தைக்குப் பெரியதோர் பாதகம். வாழ்க்கையில் அவன் தைரியமாக முன்னோக்கிச் செல்ல வேண்டாமா? அதற்குத் தேவையான அஞ்சா நெஞ்சத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கவேண்டாமா? உருவத்திலே மட்டும் குழந்தை வளர்ந்தால் போதுமா? அதன் மனத்திடமும், துணிச்சல் தன்மையும் வளர வேண்டாமா? இவையெல்லாம் சரியானபடி வளர்ந்தால்தான் அவன் வாழ்க்கையில் வெற்றியுடன் முன்னேற முடியும்.

இயல்பாகக் குழந்தைக்கு இரண்டு விதமான பயங்தான் உண்டு. பெரிய சப்தத்தைக் கேட்டால் அது பயப்படும். மேலேயிருந்து கீழே திடீரென்று விழுவது போன்ற