பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


உணர்ச்சி ஏற்பட்டால் அது பயப்படும். மற்றப் பயங்க ளெல்லாம் காம் உண்டாக்கியவை என்று டாக்டர் வாட்சன் போன்ற மனத் தத்துவர்கள் கூறுகிருர்கள். ஆதலால் நாம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் குழந்தையைப் பய மறியாமல் வளர்க்க முடியும். துணிச்சலாகக் காரியங்கள் செய்யவும் பழக்கலாம். ஏதாவது ஒன்று குழந்தைக்கு கிச்சய மாகப் பெரிய அபாயத்தை உண்டாக்கும் என்று தோன்றி ல்ை அதை மட்டும் முன்கூட்டியே அகற்றிவிட வேண்டும். மற்றப்படி குழந்தையைத் தாராளமாக விட்டுவிட வேண் டும். நான் ஒரு நாள் கடற்கரையில் உலாவிக் கொண்டிருக் கும்போது ஒர் ஐரோப்பியச் சிறுவன் கடலில் குதிப்பதைப் பார்த்தேன். அவனுக்கு ஐந்தாறு வயதிற்கு மேலிராது. அதிகமாக உள்ளே செல்லாமல் கரை அருகிலேயே இருந்து அவன் அலைகள் வரும்போது முழுகிக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தை பக்கத்திலே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இம்மாதிரி பழக்குவது நல்லது. ஒடி விளையாடினல் கீழே விழுந்து காயமாகி விடுமே, குதித்தால் கால் ஒடிந்து போகுமே என்று எதற்கெடுத் தாலும் ஓர் அபாயம் கற்பித்துக்கொண்டு குழந்தையைத் தடுப்பது அறிவுடைமையல்ல. வீரக் கதைகளைக் கூறிச் சிவாஜியின்தாய் அவரைச் சிறுவயதில் வளர்த்ததாகச் சரித் திரம் கூறுகின்றது. பயத்தை அகற்றுவதோடு தைரியமாகக் காரியங்கள் செய்யவும் காம் குழந்தைக்கு உற்சாகமளிக்க வேண்டும். பயமென்பது மிக மோசமான உணர்ச்சி. அதை அதிகமாக உடையவர்கள் வாழ்க்கையில் எந்தத்துறையிலும் வெற்றியடைய முடியாது. வாழ்க்கையில் வெற்றி வேண்டு மால்ை மனுேபலம் வேண்டும் தைரியம் வேண்டும் எதை யும் செய்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் துணிச் சலும் வேண்டும். அவற்றையெல்லாம் குழந்தைப் பருவத்தி லிருக்தே வளர்க்க உதவ வேண்டியது பெற்ருேர்களின் முக்கியக் கடமையாகும்.