பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9. குழந்தைச் சித்திரம்

சித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலோ, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்லி முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம் போடத் தொடங்கி விடுவார்கள். சுவரெல்லாம் கெட்டு விடுகிறதே என்று தாய்க்குக் கோபங்கூட வரும்.

பிறவியிலேயே ஒவ்வொரு குழந்தையும் ஓர் ஓவியன் தான்; ஆனால் பதின்மூன்று பதினான்கு வயதாகும் போது எல்லாக் குழந்தைகளும் ஒவியர்களாக இருப்பதில்லை. அப்பொழுது அவர்களில் ஒரு சிலரே உலகம் ஏற்றுக் கொள்ளுகிற முறையில் ஒவியர்களாக இருக்கமுடியும்.

ஓவியக் கலையில் பிற்காலத்தில் சிறந்தோங்க வேண்டும் என்பதற்காகவே குழந்தைக்குச் சித்திரம் எழுதச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டு மென்பதில்லை. சின்னக்குழந்தையின் மனத்திலே எத்தனையோ உணர்ச்சிகள், எண்ணங்கள் எழுகின்றன. அவற்றையெல்லாம் பேச்சிலே வெளிப்படுத்த அதற்குத் தெரியாது. சின்னக் குழந்தைக்கு நன்றாகப் பேச வராது. இருந்தாலும் அதற்குத் தனது உணர்ச்சிகளே வெளியிட ஆசை. அந்த நிலைமையிலே அது தன் உணர்ச்சிகளைப் படங்களாக எழுதிக்காட்ட முயன்றால் அது நல்லதுதானே? சித்திரமே அதற்கு அப்பொழுது உணர்ச்சிகளை வெளியிடும் பாஷை. பேசும் திறமை வளர வளரச் சித்திரம் வரையும் திறமை குறைந்து கொண்டே போகிறது. அதனால் தான், "மொழியானது