பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55
குழந்தைச் சித்திரம்


பல குருவிகள் அமர்ந்திருப்பதைக் குறிப்பிட வேண்டு மால்ை குழந்தை சாதாரணமாக ஒன்றிரண்டு குருவிகளை மிகப் பெரியதாக மரத்தின் மேலே வரைந்து காண்பிக் கிறது. இரண்டு வயதுக் குழந்தையிடம் ஒரு சிவப்பு வர்ணச் சுண்ணும்புக் கோலேக் கொடுத்தேன். அது என்னவோ கோடுகள் மேலிருந்து கீழே தரையில் வரைய ஆரம்பித்தது. கிறுக்குவது போலத்தான் முதலில் தோன்றியது. இதுதான் குழந்தையின் முதற் சித்திரம். வரைய வரையக் குழந்தை அதற்கு ஒரு பொருள் கண்டு பிடிக்கத் தொடங்குகிறது.