பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


இவ்வாறு கிறுக்குவதற்குக் குழந்தைக்குத் தாராளமாக வசதி அளிக்கவேண்டும். ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரை குழந்தைகள் இவ்வாறு கிறுக்கி மகிழ்கின்றன. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இது உதவுகின்றது. கிறுக்கல் சித்திரத்திலிருந்து அடுத்தபடியாக ஒரு வகை ஒழுங்குக்குட்பட்ட சித்திரம் தோன்றுகிறது. ஒழுங்கு என்ருல் தேர்ந்த ஒவியர்களின் படத்திலுள்ள ஒழுங்கல்ல. குழந்தைச் சித்திரத்திற்கே இயல்பாயுள்ள ஒரு ஒழுங்கு. இந்த ஒழுங்கைச் சக்தம் (Rhythm) என்று கூறலாம். கவிதையிலும் பாட்டிலும் ஏதாவது ஒரு சந்தம் திரும்பித் திரும்பி வரும். கோடுகள், வளைவுகள் முதலியவை உள்ள சித்திரங்களையே சந்தம் உள்ளவை என்றுகுறிப்பிடுகிறேன். பகலும் இரவும் மாறிமாறி வருகிறது. அதில் ஒரு சக் தம் இருக்கிறது. மூச்சு விடுவதில் ஒரு சந்தம் இருக்கிறது. இசை, காட்டியம் முதலிய கலைகளிலே சந்தம் உயிர் காடி. இது போன்ற சக்தம் குழந்தையின் சித்திரங்களிலே வெளிப்படுகிறது. பசுமாட்டிற்குக் குழந்தை சில சமயங் களிலே எட்டுக் கால்கள் போடும். திரும்பத் திரும்பக் கால்களை வரைவதிலே அதற்கு ஒரு தனிப்பட்ட இன்பம்! இதை உணராது அந்தப் பசுவைப் பார்த்து காம் சிரிப்பது சரியல்ல. ஒரு நான்கு வயதுச் சிறுவன் கறுப்பு வர்ணத்தையே உபயோகித்து ஒரு படம் தீட்டிக்கொண்டிருந்தான். அது இன்னதென்று எனக்குப் புரியவே இல்லை. ஒரே கறுப்புப் பூச்சாக எனக்குத் தோன்றியது. ஆனல் கான் அதைப் பற்றி ஒன்றும் கூருமல் பார்த்துக் கொண்டிருக்தேன். சிறுவனே அதற்கு விளக்கம் கூறத் தொடங்கினன்: "இதோ பார்த்தியா-வீடு தியிலே எரிஞ்சு போச்சு' என்று அவன் கூறினன். பெற்ருேர்களிடம் விசாரிக்கும்போது சமீபத்திலே அந்த வீதியின் ஒரு முனையில் சில குடிசைகள் தீப்பிடித்து வெந்து போனதைப் பற்றியும், தி யணைக்கும்