பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 ஒரே குழந்தை

ங்களுக்கு ஒரே குழந்தைதான? அப்படியானல் அதை வளர்ப்பதில் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உங்கள் அன்பை யெல்லாம் அதனிடம் காண்பிப்பீர்கள்-அதில் எனக்குச் சந்தேகமில்லை. உங்கள் கவனத்தை யெல்லாம் அதன் மேல் செலுத்துவீர்கள். அதிலும் எனக்குச் சந்தேகமில்லை. அவ்வன்பையும் கவனத்தையும் பற்றித்தான் நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அளவுக்கு மிஞ்சிய அன்பும் கவனமும் குழந்தைக்குக் கெடுதலாகவும் முடியலாம்.

ஒரே குழந்தை யென்றால் சாதாரணமாக அது பிடிவாத, முள்ளதாக இருக்கிறது. தொட்டதற் கெல்லாம் ஒரே கூச்சலும் அழுகையும் தொடங்குகிறது. காரணமென்ன? பெற்றோர்களுக்கு அது செல்லப்பிள்ளை. அவர்களுக்கு, அதுதான் ராஜா.

ஒற்றைக் குழந்தை தன்னங் தனியாக வளர்கிறது. அதற்குத் தன் வயதுள்ள குழந்தைகளோடு அதிகமான தொடர்பு இல்லை. அது வயது வந்தவர்களின் மத்தியிலே அவர்களுடைய காரியங்களைக் கவனித்துக் கொண்டு நிற்கிறது. இந்த வகையில் அதற்கு ஒரு பிரதிகூலம் உண்டு.

அது மற்றக் குழந்தைகளோடு கூடி விளையாடவேண்டும். தாராளமாக அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பது பெற்ரறோர்களின் தனிப்பட்ட கடமையாகும். பிறரோடு கூடியிருக்கப் பழகுவது குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்கவேண்டிய முக்கியப் படிப்பினையாகும்.