பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


வேண்டிய தெல்லாம் செய்து கொடுக்கவில்லை என்று அவர்களை நொந்து கொள்ளுவான். அவர்களோடு சரியாகப் பழகமாட்டான். ஆதலால் வாழ்க்கை அவனுக்கு எப்படி இன்ப மளிக்க முடியும்? ஒரே குழந்தையுடைய பெற்ருேர்கள் இதை கன்கு கவனிக்கவேண்டும். குழந்தை என்றும் தங்கள் பாதுகாப் பிலும் அன்பிலுமே இருக்கப் போவதில்லை. அது மற்றவர் கள் மத்தியில் வாழவேண்டும். அதற்கு அதைத் தயார் செய்யவேண்டுமானல் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பிறரிடையே குழந்தை தாராளமாகவும், சுய நம்பிக்கையோடும் பழகவேண்டும். எதற்கெடுத்தாலும் பிறரை எதிர்பார்க்கக் கூடாது என்றும் அது தெரிந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அப்பொழுதுதான் அக் குழந்தை வாழ்க்கையில் வெற்றியடையும்.