பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. குழந்தையும் பெற்றோரும்

குழந்தையிடம் அன்பில்லாத தாய் தந்தையர் இருப்பார்களா ?

"இதென்ன கேள்வி? இருக்கமாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே!" என்று பொதுவாக எல்லோருடைய மனத்திலும் எண்ணமுண்டாகும். குழந்தையிடம் அன்பு கொள்வதுதான் பெற்ருேரது இயற்கை. 'பெற்ற மனம் பித்து' என்ற பழமொழியும் அதனாலேயே தோன்றியிருக்கிறது. இந்த அடிப்படையைக் கொண்டே இதுவரை மனத்தத்துவ உண்மைகளே எழுதியிருக்கிறேன்.

ஆனால் மகவிடம் வாஞ்சையில்லாத ஒரு சில பெற்ரறோர்கள் இருத்தலும் கூடும். அந்த உண்மையையும் நாம் உணரவேண்டும். லட்சத்தில் ஒருவர் இருக்கலாமோ என்னவோ என்று நினைப்பீர்கள். நான் அப்படிக் கூடத் தைரியமாகக் கணக்கிட முன்வரவில்லை. நான் சொல்வதெல்லாம் இதுதான். அதாவது குழந்தைகளிடம் அன்பு கொள்ளாத பெற்றோர்களும் இருப்பார்கள் என்பதே. அதன் காரணத்தைச் சுருக்கமாகக் கீழே விளக்கியிருக்கிறேன்.

அன்பில்லாம லிருப்பதோடு குழந்தையிடம் வெறுப்புணர்ச்சியும் சில பெற்ரறோர்களிடம் காணப்படுகிறது. வெறுப்புணர்ச்சி என்றால் அன்பே சிறிதும் கலவாத தென்று யாரும் எண்ணக்கூடாது. மொத்தத்திலே பார்க்கும்போது வெறுப்புணர்ச்சியே மேலிட்டு நிற்கும் நிலையைத்தான் நான் குறிப்பிடுகிறேன். இந்த மாதிரி வெறுப்பு-

கு-5