பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
67
குழந்தையும் பெற்றோரும்


பிறரிடம் சண்டையிடுதல் கலகம் உண்டாக்குதல் விரோதம் கொள்ளுதல் பொருமை கொள்ளுதல் பிறருக்குத் துன்ப்ம் விளேத்தல் தன்னைப் பிறர் கவனிக்கும்படியாகக் குறும்பு செய்தல் இவற்ருேடு திருடவும் பொய் சொல்லவும் அக் குழந்தைகள் பழகிக் கொள்கின்றன. சில குழந்தைகள் வீட்டைவிட்டு ஒடி விடுவதும் உண்டு. இம்மாதிரி செய்கைகளால் பெற் ருேளின் மன அமைதியைக் குலைக்க வேண்டுமென்று தம்மை அறியாமலேயே அக் குழந்தைகளுக்கு ஆசை ஏற்படுகின்றது. நல்ல முறையில் குழந்தை வளர வேண்டுமாயின் அதை அன்புடன் பேணவேண்டும். அன்பில் மலர்கின்ற குழந்தை எவ்விதமான மனக் கோளாறு மில்லாமல் வளர்கின்றது. மித மிஞ்சிய அன்பிலுைம் இங்கு நேர்வதுண்டு. ஆனல் அதைவிட வெறுப்புணர்ச்சியின் விளைவாக உண்டாகும் தீமைகளே அதிகம். அன்பு சற்று அதிகமாகவே இருக் கலாம்; ஆனல் வெறுப்புணர்ச்சி கூடவே கூடாது. சற்று கிதானமாக யோசித்துப் பார்த்தால் அன்பு மிகுந்த பெற்ருேளிடத்திலும் சில சமயங்களிலே இந்த வெறுப்புணர்ச்சியின் சாயல் ஒரு விகாடியாவது படிவ துண்டென்பதை நாம் அறியலாம். டிேத்து கிற்கும் வெறுப் பல்ல; ஆல்ை குழந்தையால் ஏற்படும் தொந்தரவுகளில்ை ஏற்பட்ட மின்னலாய்த் தோன்றி மறையும் வெகுளி, உணர்ச்சி. அதைத் தவிர்ப்பதென்பது யாருக்கும் முடியாத காரிய மென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தாய்க்கு ஒரு சமயம் இது சாத்தியமாகலாம். தாய்மை எய்திய பெண்களிடத்திலே ஒரு அபார சக்தி இருக்கின்றது. அது