பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


மிக ஆச்சரியமானது. அதல்ை அவர்களால் அது முடியு மென்ருலும் நான் இதுவரை குழந்தையிடம் சில வேளைகளி லாவது கோபத்தைக் காட்டாத தாயைப் பார்த்ததில்லை. கையால் ஒரு சின்ன அடிபோட்டு விட்டு அக்கணத்திலேயே குழந்தையை அணைத்துக் கொள்ளும் தாயையும், லேசான சுடுசொல் ஒன்றை உச்சரித்துவிட்டு அடுத்த கணத்திலே அன்பு பொழியும் தாயையும் கான் குறிப்பிடவில்லை. வெறுப்புணர்ச்சி என்ற அலேயே தோன்ருத உள்ள முடைய தாயைத்தான் கான் கண்டதில்லை என்று சொல்லு கிறேன். இம்மாதிரி வெகு அரிதாகத் தோன்றும் வெறுப்பு ணர்ச்சியால் குழந்தையின் உள்ள வளர்ச்சிக்குப் பெரிய தொரு திங்கு ஏற்பட்டுவிடாது. சில சமயங்களிலே அந்தச் சிறு வெறுப்புணர்ச்சியே நன்மை பயப்பதாகவும் இருக் கும். தாய் ஏதாவதொரு செயலைக்கண்டு வெறுப்படைகிருள் என்ருல் குழந்தை அதை விட்டுவிட முயலும், அவ்வகை யில் அது நன்மையாகவே முடிகின்றது. மேலும் எப்பொழு தாவது லேசாக உண்டாகும் வெறுப்புணர்ச்சியானது குழந்தையின் உள்ளத்தில் ஆழ்ந்து பதியாதவாறு பெற் ருேளின் இயல்பான அன்பு அதைத் துடைத்து விடுகின்றது. ஆதலால் அவ்வித வெறுப்புணர்ச்சியைப் பற்றிக் கவலைப் படவேண்டியதில்லை. ஆனல் யாரிடமாவது இவ் வெறுப்புணர்ச்சி சற்று மிகுந்து காணப்படுமானல் அதனால் குழந்தைக்குத் தீங்கு விளைகின்றது என்பது கிச்சயம். ஆகவே அதுபற்றி அனே வரும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். குழந்தையிடம் வெறுப்புணர்ச்சி உண்டாவதற்குப் பல காரணங்கள் உண்டு. போதுமான ஒய்வு கிடைக்காமல் செய்யும்படியான அதிக உழைப்பும் பலஹீனமும் பொறு