பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69
குழந்தையும் பெற்றோரும்


மையைச் சீக்கிரம் இழக்கும்படி செய்துவிடுகின்றன. சம்ரட்சணை செய்ய இயலாத நிலையில் பல குழந்தைகள் பிறப்பது வெறுப்புணர்ச்சிக்கு ஒரு காரணமாகிறது. இப் படிப்பட்ட வெளிப்படையான காரணங்கள் அநேகம் உண்டு. இவற்ருேடு மறை உள்ளத்திலிருந்து மறைமுக மாக வேலை செய்யும் காரணங்கள் உண்டு. ஆவலோடு எதிர்பார்த்திருந்தபடி ஒரு குழந்தை அழ்காக இராது: அல்லது அதி தீட்சண்ணியம் காண்பிக்காது. தாய்க்குத் தன் கல்யாண விஷயத்திலேயே திருப்தி ஏற்பட்டிருக்காது. இவைபோன்ற காரணங்கள் எல்லாம் பெற்ருேருக்கே தெரியாதபடி மறைவாக அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் அழுந்திக் கிடந்து கொண்டு வெறுப்புணர்ச்சியை மேலே கிளப்புகின்றன. இவற்றின் உண்மைகளை அறிந்து கொள் வதால் கூடுமானவரை இவற்றைச் களைய காம் முயற்சி செய்யலாம்.