பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


தைக்குப் புரியும்படி விஷயங்களே விளக்கவேண்டும். தெரியாதனவற்றைத் தெரிந்து சொல்ல வேண்டும். விடுப்பு இயல்பூக்கம் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. அதை நாம் போற்றவேண்டும். இந்த இயல்பூக்கத்தைப் போலவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வேருெரு இயல்பூக்கத்தைப் பற்றியும் இந்தச் சமயத்தில் குறிப்பிட விரும்புகிறேன். போகிற வழியிலே ஏதாவது ஒரு கூட்டமிருக்கும். பலபேர் ஆவலோடு அங்கு சென்று பார்ப்பார்கள். வழியில் வருகிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் மற்றவர்களைப் போலத் தாமும் போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஆசையுண்டாகும். அவர்களைப் பின்பற்றி இவனும் அந்தக் கூட்டத்தைப் போய்ப் பார்ப்பான். இவ்வாறு பிறரைப் பார்த்துச் செய் யும் இயல்பூக்கத்திற்கு அனுகரணம் என்று பெயர். அனுகரணம் முக்கியமாக இரண்டு வகைகளில் கடை பெறும். மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கடந்துகொள்ள வேண்டும் அல்லது பேசவேண்டும் அல்லது பாடவேண்டும் என்றிவ்வாறு மனத்திற் கொண்டு அறிந்தே செய்வது ஒருவகை தன்னை யறியாமலேயே பிறரைப் போலச் செய்வது மற்ருெரு வகை குழ்ந்தையிடத்திலே இந்த இருவகையான அனுகரணமும் கன்கு காணப்படு கின்றன. குழந்தை தன்னுடன் பழகுபவர்களைப்போல, முக்கியமாகத் தாய் தந்தையர்களைப்போலப் பல வகைகளில் அறிந்தும் அறியாமலும் பின்பற்றி கடக்கின்றது. சொன்ன தைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்பது பழமொழி. சொன்னதைச் சொல்லுவதோடு செய்ததையும் செய்யும் குழந்தை. ஒருவர் பாடுவதையோ, நடிப்பதையோ குழந்தை வெகு சுலபமாகக் கற்றுக் கொள்ளுகிறது: கற்றுக்கொண்டு அவரைப் போலவே பாடி அல்லது கடித்துக் காண்பிக்க முயல்கிறது.