பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
73
அறிவிலே ஆசை


குழந்தைக்கு நல்ல பழக்கங்களையும், அறிவையும் உண் டாக்க இந்த இயல்பூக்கம் பெரிதும் உதவியாக இருக்கிறது. பெற்ருேர்களும் ஆசிரியர்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெற்ருேர்களைப் பார்த்துப் பல காரி யங்களே அவர்களேப்போலவே குழந்தை செய்ய முயல்கிற் தென்பதிலிருந்து மற்ருெரு விஷயமும் புலகிைன்றது. பெற்ருேருடைய பேச்சு, நடத்தை எல்லாம் குழந்தைக்கு முன்மாதிரியாக இருக்கின்றனவாதலால் அவற்றிலெல்லாம் அவர்கள் மிக எச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது. குழந்தையை கன்கு வளர்க்க ஆவல் கொண் டிருக்கும் பெற்ருேர்கள் தங்கள் நடத்தையையே, ஏன் வாழ்க்கையையே அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ள வேண்டும். களைய முடியாத குறைபாடுகளைக் குறைந்த பட்சம் குழந்தைக்குத் தெரியாதவாருவது மறைத்துக் கொள்ளவேண்டும்.