பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14. வளர்ச்சி

மிகச் சிறிய அண்டம் விந்தணுப்பாய்ந்து பூரிக்கின்றது; அதுவே குழந்தையின் வாழ்க்கைத் தொடக்கம் என்று கண்டோம். அண்டம் பூரித்தது முதல் அதன் வளர்ச்சி இடைவிடாது தொடர்ந்து கடந்துகொண்டே இருக்கிறது. கருவிலே இருக்கும்போது குழந்தையின் உடல் உறுப்புக்கள் மட்டும் வளர்ச்சியடைவதில்லை. அதன் உள்ளமும் வளர்ந்து கொண்டுதாணிருக்கிறது. தாயின் உணர்ச்சிகளும் அநுபவங்களுங்கூட. அந்தக் கருவின் உள்ளத்தைத் தொடு கின்றன என்றுகூட எண்ணவேண்டியிருக்கிறது. இதை ஒருவாறு உணர்ந்துதான் கருப்பமடைந்த பெண்களை எப்பொழுதும் சந்தோஷமாகவும் அமைதியான சூழ்நிலையிலும் உயர்ந்த எண்ணங்களும் லட்சியங்களும் கொண்டிருக்கும் படியாகவும் வைத்திருக்கவேண்டும் என்று நம் நாட்டில் வெகுகாலமாக அபிப்பிராயம் இருந்து வருகிறது. கவலையால் வாடும்படியான தாயின் பாலைக் குடிப்பதால் அது குழந்தையின் மன அமைதியைப் பாதிக்கின்றது என்று ஆராய்ச்சியால் கண்டிருக்கிறார்கள். அதைப் போலவே கருவிலிருக்கும் குழந்தையின் மனத்தையும் தாயின் உணர்ச்சிகள் பாதிக்கும் என ஊகிக்கலாம்.

பிறந்தவுடன் குழந்தையைப் பார்த்தால் அது ஒரு விதத்திலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சக்தியற்றதாகக் காணப்படுகிறது. இருந்தாலும் அது பசி வந்தால் அதைத் தெரிவிக்க அழுகிறது. ஏதாவது தொந்தரவு ஏற்பட்டாலும் அழுகிறது. தனது உணர்ச்சிகளைத் தெரிவிக்க அப்பொழுது அதற்கு அழுகை ஒன்றுதான் பாஷையாக