பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
79
வளர்ச்சி


இருக்கிறது. இருந்தாலும் அதற்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணக்கூடாது. குழந்தையின் உள்ளம் வெகு விரைவிலே வேலை செய்யத் தொடங்குகிறது. அது வெகு நுட்பமானது. அது உணர்ச்சிகளையெல்லாம் நன்கு பதிவுசெய்துகொள்ளுகிறது. இரண்டாவதாகக் குழந்தையின் உள்ளத்திலே இயல்பூக் கங்கள் மேலெழுந்து நிற்கின்றன. அவற்றையெல்லாம் அடக்கியாளச் சிறிது சிறிதாகவே குழந்தை கற்றுக் கொள்ளுகிறது. மூன்ருவதாகக் குழந்தையுள்ளம் மிகுந்த கற்பசைக்தி வாய்ந்தது. குழந்தைக்குக் கிடைத்துள்ள இந்தச் சக்தி மிகவும் ஆச்சரியமானது. இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் வைத்துக் கொண்டோமானல் குழந்தை வளர்ப்பிலே காம் எவ்வாறு கடந்து கொள்ளவேண்டு மென்பது தெரியும். குழந்தையின் உள்ளத்தில் பதிவாகும் அநுபவங்களையும் உணர்ச்சிகளை யும் மாற்றுவது எளிதல்ல. ஆதலால் அதில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் பதிவாகவேண்டும் என்பதில் ஜாக்கிரதை யாக இருக்கவேண்டும். இயல்பூக்கங்களில் விரும்பத்தகா தனவற்றை அடியோடு களைந்து விடுவதென்பது முடியாத காரியம். ஆனல் அவற்றை நல்ல வழிகளிலே செல்லுமாறு மாற்றிவிடலாம். குழந்தையின் கற்பசைக்தியின்வலிமையை அதன் விளையாட்டிலும், சித்திரங்களிலும், செய்கைகளி லும் காணலாம். அவற்றைக் குழந்தையின் அறியாம்ை யால் விளைந்தவை என்று அலட்சியம் செய்தால் அதன் கற் பனைத்திறன் குன்றிப்போய்விடும். குழந்தையின் கற்பனை உலகம் வேறு வயது வந்த நாம் காணும் உலகம் வேறு: அதனால் நமது கற்பனை உலகமும் வேறே. கமது அதுபவத்தையும் உணர்ச்சியையும் அளவைகளாகக் கொண்டு குழந்தையின் கற்பனையை அளவிடக் கி.டாது. குழந்தைப்பருவத்திலே காம் கொண்டிருந்த கற்பனையும்