பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


அப்போதைய கமது கடத்தையும் மறந்து போய் விடுவதால இப்பொழுது நம்மால் குழந்தையின் செய்கைகளே அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. அதுதாபத்தோடும் அன்போடும் பொறுமையோடும் குழந்தையை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனத் தத்துவர்கள் ஆராய்ந்து கூறியுள்ள பல உண்மைகள் பெருந்துணேயாக கிற்கும். அவ்வாறு குழந்தையை அறிந்து கொண்டு வளர்த்தால் அதன் திறமைகளெல்லாம் நன்கு வளர்ந்து பிரகாசிக்க நாம் பெரிதும் உதவி செய்ய முடியும். குழந்தை நமது பெரிய செல்வம். அது கன்கு மலர்ந்து உலகில் புகழ்பெற்று வாழ எல்லா வகைகளிலும் உதவ வேண்டுவது நமது கடமை. அதுவே நமக்குப் பெரியதோர் இன்பங் தருவதுமாகும். குறிப்பு:-குழந்தை உள்ளத்தைப் பற்றியும் குழந்தை வளர்ப் பைப் பற்றியும் சுருக்கமாக இங்கு எழுதியுள்ளேன். எல்லா அம் சங்களைப் பற்றியும் இச்சிறு நூலில் எழுதுவதென்பது முடியாது. குழந்தை உள்ளம் என்ற தலைப்புடன் முன்பே ஒரு நூல் வெளியிட் டிருக்கிறேன். அதற்குத் துணை நூலாகவே இதை எழுதுகிறேன். அந்நூலேயும் சேர்த்துப் படித்தால் பெரிதும் பயனடையலாகும்.