பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இவ்வாறு எல்லோரும் குனிந்து நிற்கும் தங்கள் குழுவினரின் முதுகின் மேல் கைவைத்துத்தாண்டி, முடிவெல்லைக்கோட்டைக் கடந்து வந்து தங்களுக்குரிய இடத்தில் நின்ற பிறகு, அதாவது முதலாவது ஆட்டக்காரர் முன் விளக்கியது போல, தாண்டிக் குதித்து வந்து தன் இடத்தில் நிற்கும் போதுதான், ஆட்டம் முடிவு பெறுகிறது.

முதலாவதாக ஆள் தாண்டிக் குதித்து குதித்து ஓடி ஒடித் தங்கள் இடத்தில் வந்து நிற்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.


80. தடி தாண்டும் போட்டி

ஆட்டத்திற்குரிய அமைப்பு முன் போலவே தான், நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்கள், வரிசை வரிசையாக, ஓடத் தொடங்கும் கோட்டின் முன்னே நிற்க வேண்டும். (படம் 77ல் உள்ளது போல)

ஒவ்வொரு குழுவுக்கும் எதிரே, நேராக, முடிவெல் லைக் கோடும், அங்கு ஒரு அடையாளப் பொருளும் உண்டு, ஒவ்வொரு குழுவின் முதலாட்டக்காரரிடமும் ஒவ்வொரு கைத்தடி இருக்கும். கைத்தடி குறைந்தது 2.அடிநீளமாவது இருக்கவேண்டும்.

‘ஒடுங்கள்’ என்று போட்டியைத் தொடங்கி வைத்ததும் முதலாட்டக்காரர் அடையாளப் பொருள் வரை ஓடி, அதனைச் சுற்றித் திரும்பி வந்து, தன்