பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

105


இடத்திற்கு வந்ததும், தன் பின்னால் நின்றிருந்தவரிடம் தடியின் ஒரு முனையை நீட்ட வேண்டும்.

இருவரும் தடியின் ஆளுக்கொரு முனையைப் பிடித்துக் கொண்டு, தங்கள் குழுவினரின் கால்களுக்குக் கீழே கொண்டு வரவேண்டும்.

உடனே, தங்கள் கால்களில் படாதவாறு, குழுவினர் அனைவரும் தாண்டிக் குதிக்கும்போது, தடியைக் கீழாகக் கொண்டு வந்து, தங்கள் குழுவின் பின் பகுதிக்கு வந்து விட வேண்டும்.

வந்ததும், ஒடிச் சென்ற முதல் ஆட்டக்காரர் அங்க்ே வந்ததும் நின்று விடவேண்டும்.

தடி வைத்திருக்கும் இரண்டாவது ஆட்டக்காரர். அங்கிருந்து அப்படியே நேராக அடையாளப் பொருளிருக்கும் இடத்திற்குத் தடியுடன் ஓடி, சுற்றித் திரும்பி வந்து, மூன்றாம் ஆட்டக்காரரிடம் தடியின் முனையை நீட்ட, இருவரும் தடியின் ஆளுக்கொரு முனையைப் பிடித்துக் கொண்டு முன்போலவே, குழுவினரின் கால்களுக்குக் கீழே கொண்டு வந்து, முன் மாதிரியே பின்னே சென்று அங்கே தங்கிக் கொள்ள, இப்பொழுது மூன்றாம் ஆட்டக்காரர் ஓடிவர இவ்வாறு ஆட்டம் தொடர்கிறது.

குழுவின் கடைசியில் இருப்பவர் தடியை வாங்கிக் கொண்டு, அடையாள எல்லைக்கு ஒடித் திரும்பி வந்து, முன்னால் நின்ற முதலாம் ஆட்டக்காரருடன் சேர்ந்து, தடியைப் பிடித்து, அதனைத் தாண்டச் செய்து, குழுவின்