பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கடைசிக்கு வர, கடைசி ஆட்டக்காரர் அங்கே நின்றுவிட வேண்டும்.

அவரிடமிருந்து தடியை விடுவித்துக் கொண்டு முதல் ஆட்டக்காரர் ஓடிவந்து, தன் குழுவின் முன்னால் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதலில் ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்ற குழுவாகும்.


81. வண்டி சக்கரப் போட்டி

நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாக முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

அந்த நான்கு குழுக்களையும் எதிரெதிராக நிற்பது போல், ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக நிற்பவரிடம் ஒரு பந்து இருக்கும். போட்டித் தொடங்க விசில் ஒலி எழும்பும்.