பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

111


85. தலைக்கு மேலே பந்தாட்டம்

ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், குழுக்களாகப் பிரிந்திருப்பவர்கள், தங்கள் குழுவுக்கேற்ப, வரிசையாக (File) நிற்க வேண்டும் (படம் 77ல் உள்ளது போல).

வரிசையில் நிற்கும் ஒவ்வொரு குழுவின் முன்னாட்டக்காரரும் தன் தலைக்கு மேலே பந்தைக் கொண்டு சென்று தன் பின்னே உள்ளவரிடம் தர, அவர் தலைக்கு மேலேயே பந்தை இரண்டு கைகளாலும் பெற்று அவர் அடுத்தவருக்கு தர, இவ்வாறு பந்து படைசி ஆட்டக்காரரிடம் வந்து சேர்ந்த பிறகு, அவர் பந்தை எடுத்துக் கொண்டு, அவரது குழுவுக்கு நேர் எதிர்புறத்தில் குறித்துள்ள எல்லைக்கு ஓடித் தொட்டுவிட்டு முன்புறமாக வந்து நின்று அதேபோல் பந்தைத் தலைக்கு மேலே பின்னுக்கு வழங்க வேண்டும்.

இப்படியாக, குழுவில் அனைவரும் ஓடுவதற்கு வாய்ப்புப் பெற்ற பிறகு, முன்னால் நின்ற முதலாட்டக்காரர் கடைசி ஆளாகப் பந்தைப் பெற்று, ஓடி முடித்து, தான் முன்னே நின்ற பழைய இடத்திற்கு வந்து சேர்ந்து விட வேண்டும்.

முதலில் ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறும்

குறிப்பு: பந்தைப் பெறும்பொழுது, தவற விடுகின்றவர், அவரே ஓடிப் போய் பந்தை எடுத்து வந்து தான் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.