பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

119


ஓடி விட்டாலுங்கூட, அவரே போய் எடுத்துக்கொண்டு வரவேண்டும், வேறு யாரும் அவருக்கு உதவி செய்யக்கூடாது.


92. வளையத்துள் பந்தாட்டம்

கூடைப் பந்தாட்ட வளையம் இருக்கும் இடத்திலிருந்து, தேவையான தூரத்திற்கு ஒரு ஒடத் தொடங்கும் கோட்டை குறிக்க வேண்டும்.

வழக்கம் போல, குழுக்கள் வரிசையாக நிற்க வேண்டும்.

குழுவிலுள்ள முதலாட்டக்காரர் அனைவரிடமும் ஒவ்வொரு பந்து இருக்கவேண்டும்.

போட்டித் தொடங்கிய உடனே, முதலாட்டக்காரர் அனைவரும் தமக்குரிய பந்துடன் கூடைப் பந்தாட்ட வளையம் நோக்கி ஓடி, பந்தை வளையத்திற்குள் எறிய வேண்டும்.

ஒருமுறை பந்தை வளையத்தில் போட்டு வெற்றிபெற்ற பிறகு, பந்தைப் பிடித்துக்கொண்டு, தனது குழு நோக்கி ஓடி வந்து, பந்தை அடுத்தவரிடம் தந்துவிட்டு குழுவின் பின்னாட்டக்காரராக மாறி நின்றுவிடவேண்டும்.

முன்னாட்டக்காரர் போலவே, குழுவில் உள்ள அனைவரும் ஒரு முறை செய்து, வளையத்துக்குள் பந்தை எறிந்து வெற்றி பெற்ற பிறகே வரவேண்டும்.