பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெளியேற்றப்படுவார். இவ்வாறு எல்லோரும் வெளியேற்றப்படும் வரை, ஆட்டம் தொடரும்.

வட்டத்திற்குள் பந்து கிடந்தால், உள்ளேயிருப் பவர்கள் அதனைக் காலால் உதைக்கவோ அல்லது எடுத்து வெளியே எறிவதோ கூடாது. வட்டத்தில் நிற்பவர்கள் வந்து பந்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அங்கிருந்தே பந்தால் அடிக்காமல், தன் இடத்திற்கு வந்தேதான் பந்தை ஆட வேண்டும். பிறகு, வட்டத்தில் உள்ளவர்கள் மான்களாகவும், மான்களாக ஆடியவர்கள் வேட்டைக்காரர்களாகவும் மாறி ஆட, ஆட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெறும்.

5. கோழியும் குஞ்சும்

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, விளையாட இருப்பவர்கள் எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும். வட்டத்திற்குள்ளே 5 பேர் மட்டும் ஒருவர் இடுப்பை ஒருவர் (குழந்தைகள் ரயில் விளையாட்டு ஆடுவது போல) சங்கிலி கோர்த்தது போல பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர்களுள் ஒருவரிடம் பந்து இருக்க வேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம்:

பந்தை வைத்திருப்பவர், சங்கிலி கோர்த்துள்ளது போல் நிற்கும் ஐவரில், கடைசியாக நிற்பவரைக்