பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


6. தங்க வாத்து

அமைப்பு:

சுண்ணாம்பினால் வட்டமாகக் கோடு போட்டு குறித்திருக்க வேண்டும் ஆட வந்திருப்பவர்கள் அனைவரும் வட்டத்திற்குள்ளே நின்று கொண்டிருக்க, வட்டத்தின் கோட்டின் மேல் ஒருவர் மட்டும் நின்று கொண்டிருப்பார். அவர் கையில் ஒரு பந்து இருக்கும்.

ஆட்டத்தின் நோக்கம்:

வட்டத்தின் வெளியே (கோட்டின் மேல்) நிற்கும். அந்த ஒருவர், தன் கையிலுள்ள பந்தினால், வட்டத்திற்குள் இருக்கும் ஆட்டக்காரர்களை அடித்து வெளியேற்ற முயற்சிப்பார். பந்து தன்மேல் பட்டவர் உள்ளே ஆடும் ஆட்ட வாய்ப்பை இழந்து விடுவதோடு அவர் வட்டத்திற்கு வெளியே வந்து நின்று அந்த ஒருவரோடு சேர்ந்துகொண்டு மற்றவர்களையும் பந்தால் அடித்து வெளியேற்ற முயற்சிக்க வேண்டும்.

ஆடும் முறை:

பந்து தொட்டு வெளியேற்றப்படுவர் எல்லாம் வட்டத்திற்கு வெளியே வந்து நின்று, ஆட வேண்டும். முதலாமவர், முதல் முறையாக வட்டத்திற்குள் இருப்பவர்களை அடிக்க முயற்சிக்கும்பொழுது, பந்து யார் மேலும் படாவிட்டால், மீண்டும் அவரே ஓடிப்போய் பந்தை எடுத்து வந்து, தாக்குதலை செய்ய வேண்டும்.

தங்க வாத்து என்பது ஒரு கதை, அதைத் தொட்டவர் கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து சென்றார்கள் என்பதுபோல, பந்து தொட்டவுடனே பந்து பட்டவர்கள் உடனே சேர்ந்து கொண்டு, ஆட முயற்சிப்பதால் இந்த ஆட்டம் தங்க வாத்து எனப் பெயர் பெற்றது.