பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


8. நேருக்கு நேர்

அமைப்பு:

10 அல்லது 15 அடி ஆரமுள்ள இரண்டு வட்டங்கள் எதிரெதிரே அமைந்திருப்பது போல, சுண்ணாம்புக் கோட்டினால் முதலில் குறிக்க வேண்டும். அல்லது வட்டத்திற்கு பதிலாக அதே சம அளவுள்ள இரண்டு சதுரங்களையாவது ஆடுகளமாக அமைந்திருக்க வேண்டும். இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் ஒரு நேர்க்கோடு இருந்து பிரிப்பது போல அமைந்திருப்பதாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து, ஆட வந்திருப்பவர்களை சம எண்ணிக்கை யுள்ள இரு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு வட்டம் அல்லது சதுரத்திற்குள் நிற்க வைக்க வேண்டும். ஆட்டத்திற்குள் பயன்படும் பந்தை, ஏதாவது ஒரு குழு வைத்திருக்கலாம்.

ஆட்டத்தின் நோக்கம்:

பந்தை வைத்திருக்கின்ற குழுவானது, தமது எதிரிலுள்ள வட்டத்துள் இருக்கும் ஆட்டக்காரர்களைப் பார்த்து பந்தை தூக்கியெறிந்து, அவர்கள் மேல் படும்படியாக ஆடுவார்கள். பந்து தொட்ட அனைவருமே ஆடும் வட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

பிறகு, அந்த குழு அங்கிருந்தே அடுத்த வட்டத்திலுள்ள ஆட்டக்காரர்களைப் பார்த்து, பந்தால் அடிக்கத் தொடங்கும் இவ்வாறு மாறிமாறி, மாற்றி மாற்றி,