பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

21


பந்தைத் தூக்கியெறிந்து தாக்கியடித்து எந்தக் குழு எதிர்க் குழுவிலுள்ள அனைவரையும் விளையாட்டிலிருந்து. வெளியேற்றி விடுகிறதோ அந்த குழுவே இறுதியில் வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும்.

ஆடும் முறை:

ஒருமுறை தாக்குவதற்காகத் தூக்கி வீசி எறியப்பட்ட பந்தானது, எத்தனை பேர்கள் மேல் பட்டாலும் பந்துபட்ட அனைவருமே வெளியேறிவிடவேண்டும். பந்து அவர்கள் மேல் பட்டாலும், படாவிட்டாலும், முதலில் எறிந்த குழுவினருக்கு எதிர்த்தாற்போல உள்ள் குழுவிற்கே அடுத்ததாக எறியும் வாய்ப்பு போய் சேரும்.

யார் மேலும் பந்து படாது போனால், அதிக தூரம் சென்றுவிடுமல்லவா! அதை எடுத்து வந்து ஆட்டத்தைத் தொடங்க, அதிக நேரமும் ஆகிவிடுமே! அதனால் ஆட்டத்தில் கிடைக்கும் விறுவிறுப்பும் வேடிக்கையும் குறைந்து போகுமே!

அதற்காகவே, வெளியேற்றப்பட்ட அந்தந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழுவுக்குப் பின்னால் நின்று கொண்டு, யார் மேலும் படாமல் வெளியே வருகின்ற பந்தைப் பிடித்துத் தங்கள் குழுவினரிடம் தந்து, அடித்தாடச் செய்யவேண்டும்.

பந்திடமிருந்து தப்புவதற்காக, வட்டத்தை விட்டு வெளியே செல்கின்றவர் கூட, ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.