பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


10. குதிரை வீரன்

அமைப்பு:

ஆடுதற்காக வந்தவர்களையெல்லாம் இருவர் இருவராகப் பிரித்துவிடவேண்டும். அதிலே ஒருவன் குதிரையாகவும் (கனமாக இருந்தால்) மற்றொருவர் குதிரை வீரனாகவும் இருக்கவேண்டும். அதாவது ஒருவர் முதுகிலே ஏறி பின்புறம் (இடுப்பில்) அமர்ந்துகொண்டு, கால்களிரண்டையும் குதிரையாளரது முன் புறத்தில் வைத்து, இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

30 அடி விட்டம் உள்ள வட்டம் ஒன்று போட்டிருக்க வேண்டும். இவ்வாறு குதிரையும் குதிரை வீரராகவும் மாறிய மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் வட்டத்திற்குள் வந்து உலவிக் கொண்டிருக்கவேண்டும். குதிரையும் குதிரை வீரனும் சேர்ந்தது ஒரு குழுவாகும். அதிலே, குதிரை வீரராக இருக்கும் ஒருவரிடம் பந்து இருக்கும்.

ஆடும் முறை:

விளையாட்டை நடத்திச் செல்பவர், விசில் ஒலிமூலம் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். உடனே, பந்து வைத்திருக்கும் வீரர், (முதுகில் இருந்தவாறே) மற்ற குதிரை வீரர்களைப் பார்த்து அடிக்கவேண்டும்.

அப்பொழுது, தன் மேல் உள்ள வீரர் மேல் பந்து படாதவாறு குதிரையாக இருப்பவர் குனிந்தும்,