பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

27


குறிப்பு:

விசிலுக்குப்பதிலாக, இசைத்தட்டின் மூலமும் இந்த ஆட்டத்தை ஆடலாம். பந்து கை மாறிக்கொண்டிருக்கும்பொழுது, இசையும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். இசை நிறுத்தப்படும் பொழுது, பந்தைக் கையில் வைத்திருப்பவர். ஆட்டம் இழக்கிறார்.

ஆகவே, கைமாற்றும்போது சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் ஆடவேண்டும். பந்துக்கு பதிலாக, வேறு எந்தப் பொருள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்திக் கூட ஆடி மகிழலாம்.

12. பிடி ஆட்டம்

அமைப்பு:

முன் ஆட்டத்தைப் போலவே, ஒரு பெரிய வட்டம் போட்டு, அதைச் சுற்றி அனைவரும் நிற்கவேண்டும். அந்த வட்டத்தின் மையத்தில், பந்துடன் ஒருவரை நிற்கச் செய்ய வேண்டும். வட்டத்தில் நிற்கும் ஒருவரிடமும் இன்னொரு பந்து இருக்கும்.

ஆடும் முறை:

நடுவில் நிற்பவர் தன்னிடமுள்ள பந்தை பந்து வைத்திருக்கும் எதிர்ப்புறமுள்ளவரிடம் எறிய வேண்டும், அதே சமயத்தில் வட்டத்தில் நிற்பவரும், நடுவில் உள்ளவரை நோக்கி எறிய வேண்டும்.

தான் எறிகிறபொழுதே எதிர் வருகின்ற பந்தைக் கீழே நழுவவிடாமல், பிடித்துக் கொள்கின்ற