பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

39


II. தொட்டோடும் விளையாட்டுக்கள்


21. பாவனையாட்டம்

அமைப்பு:

ஆடஇருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆடுகள் எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவும். அது வட்டமாகவும் இருக்கலாம். சதுரக்கட்டமாகவும் இருக்கலாம்.

எல்லைக் கோட்டிற்கு வெளியே ஒருவரை நிற்க வைத்து, எல்லா ஆட்டக்காரர்களையும் எல்லைக்குள்ளே நிற்க வைக்க வேண்டும்.

ஆடும் முறை:

வெளியே நின்றுகொண்டிருப்பவர், எந்த முறையில் எல்லோரும் ஓடவேண்டும் என்றுதானே முதலில் செய்து காட்டுவார். அது தவளை தத்துவது போலவும், கங்காரு குதிப்பது போலவும், நொண்டிக் கோழி நடைபோலவும், காக்கை பறப்பது போலவும் இருக்கலாம்.

‘அவர்’ காட்டிய பாவனையிலேயே மற்றவர்கள் ஓட வேண்டும். விரட்டிப் பிடிக்கும் அவரும் அதே பாவனையில் தான் ஓடிவந்து தொட்டுப் பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

இந்த மாதிரி முயற்சியில் அவர் யாரையாவது தொட்டு விட்டால், தொடப்பட்டவர். எல்லைக்கு