பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இப்படி நிற்பது, மீனுக்காக ஏங்கி, கொக்கு தவம் செய்வதுபோல இருக்கும்.

இவ்வாறு வேகமாக ஓடிவந்து, திடீரென்று மேற் கூறியவாறு நிற்கின்றவரே தொடுவதிலிருந்து தப்பித்துக் கொள்வார். காலுக்கிடையில் கை நுழைத்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்கும்பொழுது. சமநிலை (Balance) கிடைக்காமல் ஆடலாம். தள்ளாடலாம். ஆனால் கையை மூக்கைவிட்டு எடுப்பதோ, மற்றும் வலது காலை கீழே ஊன்றுவதோ கூடாது.

அவ்வாறு நடந்துவிட்டால், அவர் தொடப்பட்டு, அதன் மூலம் அவர் தொடுகின்ற ஆட்டக்காரராக மாறிவிடுவார்.

குறிப்பு:

இதேபோல், தரையில் படுத்துக்கொள்ளுதல், மரத்தில் ஏறி கிளையில் தொங்குதல், சிலைபோல் அசையாமல் நிற்றல், அல்லது ஒரு மிருகத்தைப்போல் பாவனைசெய்தல் போன்ற முறைகளைக் கொண்டும் ஆடி மகிழலாம்.

26. தொட்டால் ஒட்டி

அமைப்பு:

எல்லா ஆட்டங்களையும் விட, இதற்கு கொஞ்சம் அதிக அளவு பரப்பமைந்த ஆடுகளம் இருந்தால் வசதியாக இருக்கும்.

ஆடுவதற்கென்று தேவையான அளவு ஓர் ஆடுகள எல்லையை அமைத்துக் கொள்ளவும். எல்லைக்குள்ளே