பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

47


28. மந்திரி ஆட்டம்

அமைப்பு:

ஆட்டத்திற்குரிய ஆடுகள அமைப்பு, முன் ஆட்டத்திற்குரியது போல்தான்.

மந்திரி என்று ஒருவர் இருந்தால், மெய்க்காப்பாளர் என பல பேர்கள் இருப்பார்கள் அல்லவா! அதேபோல் துணையாக, மூன்று அல்லது நான்கு மெய்க்காப்பாளர் கள் என்றும் அவர்கள் ஆடுகளத்தின் உள்ளே நிற்க வேண்டும்.

மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும், அவர்களை விரட்டித் தொட முயல வேண்டும்.

ஆடும் முறை:

மற்ற ஆட்டக்காரர்கள் மந்திரியைப் பிடிப்பதற்காக விரட்டிக்கொண்டு வர, மந்திரி தன் ஆட்களோடு தப்பிக்க ஆடுகளம் முழுவதும் ஓட வேண்டும்.

தன்னால் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்த உடனேயே, மந்திரியானவர் தன் காப்பாளர்களை நோக்கி, ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட, உடனே அவர்கள் அவரைச் சுற்றி நின்று கை கோர்த்த வாறும், திரும்பிக் கொண்டும், மந்திரியைத் தொடாதவாறு வட்டமிட்டும், வந்தவர்களைத் தள்ளியும், தடுக்க முயல வேண்டும்.

அவர்களையும் மீறி விரட்டுபவர்கள் தொட்டு விடுவார்கள் என்ற நிலைமை உருவானால், மந்திரி தன்