பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

51


தொடப்பட்டவர் இப்பொழுது உடனே விரட்டு பவராக மாற, விரட்டிக்கொண்டு வந்தவர் இப்பொழுது விரட்டப்படுபவராக மாறி, எதிர்த்திசையிலே ஒடத் தொடங்க வேண்டும்.

அவரும் களைத்துப்போனால், தன் அருகிலே உள்ள ஒருவரைத் தொட, அவர் விரட்டுபவராக மாறிவிட, விரட்டிவந்தவர் விரட்டப்படுபவராக மாற, ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

குறிப்பு:

இந்த விளையாட்டில், அடிக்கடி ஆளைத் தொட்டு, ஆட்டக்காரர்கள்ை மாற்றிக் கொண்டேயிருந்தால் தான், ஆட்டக்காரர் அனைவருக்கும் ஆடுவதற்கு சுவையாக வும் சுகமாகவும் இருக்கும்.

ஒருவரையே அடிக்கடி தொடுவதோ, மற்றவர்களை அப்படியே சும்மா நிற்க விடுவதோ, ஆட்டத்தின் நோக்கத்தையே பாழ்படுத்திவிடும்.

31. புகலிடம்

அமைப்பு:

ஆட இருக்கின்ற அத்தனைபேரும், குறிப்பிட்ட ஆடுகள எல்லைக்குள்ளே ஆங்காங்கே, தான் நிற்கின்ற, இடத்தில் சிறு வட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும்.

விரட்டுவோர் ஒருவரும், விரட்டப்படுவோர் ஒருவர் என்றும் தனித்தனியே வட்டமில்லாமல், சற்று எட்டி எட்டி நின்றிருக்க வேண்டும்.