பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குழுவும் ஆட்டத்தில் தொடர்ந்து பங்குபெறுகின்ற வாய்ப்பினை இழந்துவிடும்.

இறுதிவரை தன் வாலைக் காத்துக் கொள்கின்ற குழுவே விளையாட்டில் வெற்றி பெற்றக் குழுவாகும்.

35. யாருக்கு யார்?

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, ஆட வந்திருப்பவர்களை 5 பேர் கொண்ட குழுவாகப் பிரித்திருக்க வேண்டும்.


முதல் ஐவரை அழைத்து ஒவ்வொருவருக்கும் 1,2,3,4,5 என்று ஒரு எண்ணைக் கொடுத்துவிட வேண்டும்.

மற்றக் குழுக்கள் எல்லாம், குறிப்பிட்டிருக்கும் எல்லைக்கு வெளியிலே அமர்ந்து கொண்டு, வேடிக்கை பார்த்து உற்சாகப் படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

தங்களுக்கென்று ஒரு எண்ணைப் பெற்ற அந்த ஐவரும் ஆடுகளத்தினுள் நிற்க வேண்டும்.

ஆட்டத்தைத் துவக்குவதற்குரிய சைகைக் கிடைத்தவுடன், 1வது ஆட்டக்காரரை 2-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும் 2வது ஆட்டக்காரரை மூன்றாம்