பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

57


எண்ணுள்ள ஆட்டக்காரரும், 3வது ஆட்டக்காரரை 4-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும், 4வது ஆட்டக்காரரை 5-ம் எண்ணுள்ள ஆட்டக்காரரும், 5-ம் ஆட்டக்காரரை 1வது எண்ணுள்ள ஆட்டக்காரரும் விடாது விரட்டிப் பிடிக்க முயல வேண்டும்.

தனக்குரிய ஆளைத் தேடி விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் அவரவர் ஈடுபட்டிருக்கும் பொழுது, தன்னைப் பிடிக்க பின்னால் வருபவரிடமிருந்தும் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

யார் யாரை முதலில் தொடுகின்றாரோ, அவரே அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவராவார்.

பிறகு, வேறு ஒரு குழுவை (ஐவரை) அழைத்து அதேபோல் எண்களைத் தந்து ஆடச் செய்ய வேண்டும்.

குறிப்பு:

ஆடுகள எல்லைக்கு அப்பால் ஓடக் கூடாது என்று விதியமைத்துக் கொள்வது அந்தந்த ஆடுகள இடத்தின் அமைப்பையும், அமைப்பாளரின் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.

இதே ஆட்டத்தை ஏழு அல்லது எட்டு பேர்களை வைத்துக் கூட, எளிதாக ஆடலாம். ஆனால் ஆர்வத்துடன் ஆடி மகிழவேண்டும்.