பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கைகளைப் பிணைத்துக் கொண்டு, கடைசி ஒருவர் இருக்கும் வரை பிடிக்க வேண்டும்.

ஆட்ட இறுதியில் விரட்டுவோர் அதிக எண்ணிக்கையில் இருக்க, விரட்டப்படுபவர் ஒருவர்தான் இருப்பார்.

கடைசி வ்ரை, கூடிப் பிடிப்பவரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பவரே வெற்றி பெற்றவராவார்.

38. வட்டமோ வட்டம்

அமைப்பு:

ஆடுகளத்தினுள் ஆங்காங்கே சிறு வட்டங்கள் போடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, 20 பேர் பங்கு கொள்கிறார்கள் என்றால், 19 வட்டங்கள் ஆடுதற்குத் தேவைப்படும் ஆகவே, இருக்கின்ற ஆள் எண்ணிக்கைக்கு ஒரு வட்டம் குறைவாகவே இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுகளத்திற்கு அப்பால் சிறிது தூரத்திலிருந்து, எல்லோரையும் நிற்க வைத்து, ஓடவிட்டால், அவர்கள் வேகமாக ஓடிச்சென்று, இருக்கின்ற வட்டங்களுக்குள் நின்று கொள்வார்கள்.

வட்டம் கிடைக்காத ஒருவர்தான். ஆடுகளத்திற்கு வெளியே நின்று, ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.