பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

69


இவ்வாறு பாதை மாறி மாறி வரவர, ஓடுவோருக்கும். துரத்துவோருக்கும் இன்பமாகவும் இருக்கும். பாதை அமைக்கின்ற ஆட்டக்காரர்களுக்கும் பொழுது போக்காகவும் இருக்கும்.

ஓடுபவர் பிடிபட்டவுடன், மீண்டும் இருவரைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தைத் தொடங்கி ஆடவேண்டும்.

45. வா பார்க்கலாம்

அமைப்பு:

43 வது ஆட்டத்திற்கு உரிய ஆடுகளத்தைப் போல அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.

ஆடுகளத்தின் இருபுறமும் ஆட்டக்காரர்களை இரு சம எண்ணிக்கை இருக்கும்படி பிரித்து, நிறுத்தி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணை ஒன்றிலிருந்து ஆரம்பித்து, எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும்.

இப்பொழுது இரு குழுவிலும் ஒரே எண் வரும் ஆட்டக்காரர்கள் இருப்பார்கள் அல்லவா?

ஆடும் முறை:

நடுக்கோட்டின் மேலே ஒரு ஆட்டக்காரர் நின்று கொண்டு, ஒரு எண்ணைக் (6 என்று வைத்துக் கொள்வோம்) கூப்பிட, இரண்டு குழுக்களிலும் உள்ள 6 என்ற எண்ணுக்குரியவர்கள் இருவரும் தாங்கள் வரிசையாக நிற்கும் குழுவிலிருந்து முன்னுக்கு வந்து நிற்க வேண்டும்.