பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

83


ஐந்து (25) சொற்களை, நிறுத்தி, நிதானமாக, இருமுறை வாசிக்கவேண்டும்.

உதாரணமாக, அன்பு, அறிவு, ஆசை, அச்சம், அடக்கம், ஆண்மை, ஆற்றல், ஆண்டவன், ஆத்திரம், ஆனந்தம், அற்புதம், அதிசயம், அறிவியல், அறிஞன், அகிலம் என்பவை போன்று சிறுசிறு சொற்களாக இருப்பது நல்லது.

சொற்களைக் கேட்டுத் தங்கள் நினைவில் பதித்துக் கொண்ட குழுக்கள், தங்களுக்குள்ளேயே அமர்ந்து, சொற்களை நினைவுபடுத்திக் கொண்டு, தங்களுக்கெனக் கொடுத்திருக்கும் தாளில் எழுதிக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு சரியான சொல்லுக்கும், ஒவ்வொரு மதிப்பெண் உண்டு. அதிக மதிப்பெண் பெற்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.


58. எந்தப் பக்கம்?

மாணவர்களை முதலில் எழுந்து நிற்கச் செய்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு எந்தெந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை ஆசிரியர் விளக்கிக் கூறவேண்டும்.

அடுத்து, மாணவர்களைத் தயாரா என்று கேட்டு, இந்த விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

ஆசிரியர் ‘தெற்கு’ என்று சொன்னவுடன், எல்லோரும் தாண்டிக் குதித்துத் தெற்குப் பக்கம் திரும்பி நிற்க வேண்டும்.