பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தவறு ஏற்பட்டிருக்கிறது. எங்கே, எப்படி என்பதை யெல்லாம் தமக்குத் தந்துள்ள தாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கதை முடிந்தபிறகு, தாங்கள் கண்டுபிடித்து எழுதியுள்ள தவறுகளை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதிகப் பிழைகளைக் கண்டுபிடித்தவரே இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவராவார்.


67. பேச்சுப் போட்டி

மாணவர்கள் பொதுமக்கள் போல் பார்வையாளர் களாக எதிரில் அமர்ந்திருக்க, விளையாட்டை நடத்து வோர் சோதனையை நடத்திக் கொண்டிருக்க, பேச்சுப் போட்டி தொடங்குகிறது.

மாணவர்களில் ஒருவர் பங்கு பெறுகிறார். எந்தத் தலைப்பாக இருந்தாலும் சரி, அவர் இடைவிடாமல், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

கைகால்களை அசைப்பதோ, நடிப்பதோ, பாவனை செய்வதோ கூடாது. அதே சமயத்தில், வாய் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

இடையிலே யோசிப்பதற்காக நிறுத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, அவர் பேசும் வாய்ப்பை இழப்பதுடன், ஆட்டத்தையும் இழந்து விடுகிறார்.

அதிகநேரம் பேசுபவரே வெற்றிபெற்றவராகிறார்.