பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


69. கண்டுபிடி!


மாணவர்களை நான்கு குழுவாகப் பிரிக்க வேண்டும்.

ஒரு மேசையின்மேல் பல கட்டங்களைப் போட்டு, பிரித்துவைத்து, அந்த ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும், ஒவ்வொரு பொருளை வைக்க வேண்டும்.

குழு குழுவாக வந்து, என்னென்ன பொருள் ‘எங்கெங்கே இருக்கிறது என்று கவனித்தபிறகு, வகுப்பறையை விட்டு, சிறிது நேரம் வெளியே செல்ல வேண்டும்.

பிறகு, கட்டங்களில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட வேண்டும்.

மீண்டும், குழு குழுவாக வந்து, 1 நிமிடத்திற்குள், இடம் மாறியுள்ள பொருட்களைப் பார்த்துவிட்டு, தங்கள் இடத்திற்குச் சென்று தங்களிடமுள்ள தாளில் குறித்துத் தரவேண்டும்.

சரியாக எழுதித் தந்து, அதிக வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.


70. எனக்கொரு பந்து


மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்கச் செய்திருக்க வேண்டும்.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஒன்று குறைந்திருப்பது போல பந்துகள் வகுப்பறையின் ஒரு