பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

கெடிலக்கரை நாகரிகம்


அவர்கட்கு நட்பாகவும் பகையாகவும் செயல்பட்டு ஐதர் அலி, அவர் மகன் திப்பு, ஆர்க்காடு நவாப்புகள், ஐதராபாத் நிசாம்கள் முதலியோர் பெரும்பங்கு பெற்றிருந்தனர்.

ஆங்கிலேயர் செல்வாக்கு

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு சில இடங்கள் ஆங்கில ஆணையரின் கீழ் இருந்தாலும், மொத்தத்தில் தென்னார்க்காடு மாவட்டம் 1748 முதல் 1795 வரை, கர்நாடக (ஆர்க்காட்டு) நவாப் முகமது அலியின் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. நவாப்பின் உதவியாளர்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். 1795இல் முகமது அலி இறந்தபின், அவருடைய மூத்த மகன் உமதத் - உல் - உமர் பொறுப்பில் 1801 வரை ஆட்சி இருந்தது. இவ்வாறு இப்பகுதி கர்நாடக நவாப்புகளின் பொறுப்பில் இருந்தாலும், ஆங்கிலேயர்களின் இடையீடுகட்கும் தலையீடுகட்கும் அளவேயில்லை; அவர்கள், நவாப் மன்னர்களைப் பலவகைகளில் ஆட்டிப் படைத்து வந்தார்கள். இறுதியாக 1801 இல், தமிழ் நாட்டின் மற்ற மாவட்டங்களைப் போலவும், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவும் தென்னார்க்காடு மாவட்டமும் (திருமுனைப்பாடி நாடும்) ஆங்கிலேயரின் முழு ஆட்சிப் பொறுப்பின் கீழ் வந்து விட்டது.

ஆங்கில ஆட்சி

கர்நாடக நவாப் கையிலிருந்து 1801இல் ஆங்கிலேயரின் கைக்கு முற்றிலும் மாறிய திருமுனைப்பாடிநாடு (தென்னார்க்காடு மாவட்டம்) பாரதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டு வந்தது. மகாத்மா காந்தியடிகளின் அரும் பெரு முயற்சியால் 1947 நவம்பர் முதல் நாள், தென்னார்க்காடு மாவட்டத்தின் இடையிடையே உள்ள புதுச்சேரிப் பகுதிகள் பிரெஞ்சுக்காரரிடமிருந்து விடுதலை பெற்றன.

உரிமைப் போராட்டம்

விடுதலைக்காக அண்ணல் காந்தியடிகள் வகுத்து நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் தென்னார்க்காடு மாவட்டமும் முழுப்பங்கு ஏற்றிருந்தது. மாவட்டத்தில் விடுதலை வேண்டிப் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப் பெற்றன; ஒத்துழையாமை, வெளிநாட்டுப் பொருள் விலக்கல், கதர்