பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கெடிலக்கரை நாகரிகம்


*“எவ்வழி உறைந்தான் றம்முன் என்றலும்” [1]

என்பதாகும். ஈண்டு ‘நம்முன்’ என்பது ‘நம் அண்ணன்’ என்னும் பொருளைக் குறிக்கிறது. குகனும் ஓர் உடன் பிறந்தவனாக இராமனால் கொள்ளப்பட்டுள்ளான் என்பது நினைவு கூரத்தக்கது.

இவ்வாறு ஆன்றோர் பலரின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு ஆராயின், ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் அண்ணன்’ என்ற பொருளே பொருந்தும் என்பது போதரும். இதனால், திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற உறவுமுறையும் தெளிவுப்படும். இந்தக் கருத்தையெல்லாம் வைத்துக் கொண்டு ஆராயின், இங்கே, ஒரு செய்தியைப் பின்வருமாறு நுனித்துணர்ந்து கூறலாம்:

‘மலையமான் திருமுடிக்காரி தன் வாணாள் இறுதியில் சோழப் பேரரசுடன் பகைத்துக் கொண்டிருக்கவேண்டும். இருதிறத்தார்க்கும் நடந்த போரில் சோழன் காரியைக் கொன்று அவன் இளஞ்சிறார்களைச் சிறைப்பிடித்துச் சென்று யானை இடறிக்கொல்ல ஏற்பாடு செய்தான். புலவர் கோவூர் கிழார் தடுத்துக் குழந்தைகளைக் காத்தார். கோவூர் கிழாரால் ஏற்பட்ட இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, திருமுடிக்காரியின் தம்பியாகிய திருக்கண்ணன் மீண்டும் சோழர் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான். சோழரின் கீழ்க் குறுநில மன்னனாயும் அவர் தம் படைத்தலைவனாயும் பணிபுரிந்து வந்தான். அதனால்தான், ‘சோழிய ஏனாதி’ என்ற பட்டமும் இவனுக்குக் கிடைத்தது.

மலையமான்கள் இருவரின் உறவு முறையைத் தெளிவு செய்து கொள்வதற்குச் சங்கநூற் பாடல்கள் நன்கு துணை செய்கின்றன. மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் (புறம் : 37, 39, 226) பாடியுள்ளார்; மலையமான் திருமுடிக்காரியையும் (புறம் : 126) பாடியுள்ளார்; மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனையும் (புறம் : 174) பாடியுள்ளார்; அதிலும், ஒவ்வொருவரையும் நேரில் விளித்துப் பாடியுள்ளார். எனவே, இந்த மன்னர்கள் மூவரும் மாறோக்கத்து நப்பசலையார் காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. இது நிற்க, கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நான்கு பாடல்களில் (புறம் : 41, 46, 70, 386) பாடியுள்ளார்; இவற்றுள் ஒன்றில் (புறம் : 46) மலையமான் மக்களைக் கொல்ல


  1. *கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - கங்கை காண்படலம் - 38.