பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

151


சொல் அளவிலேகூட மிக்க தொடர்பு இருப்பதைக் காணலாம். முனையரையர்கள் ஆண்டதால் ‘முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? அல்லது, முனைப்பாடி நாட்டை யாண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்குமா? - என்றெல்லாம் ஆராயத் தோன்றலாம். இவ்விரண்டனுள் எதற்கு எது காரணம் என்பது எளிதில் தெளிவுபடாவிடினும், இவ்விரண்டும் நெருங்கிய தொடர்புடையவை என்பது வரைக்கும் மலையத்தனை உண்மை!

திருமுனைப்பாடி நாட்டு மன்னராய நரசிங்க முனையரையர் எந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு அரசு செலுத்தினார்? அவருடைய காலம் யாது? என்ற வினாக்கட்கு விடைகாண வேண்டும்:

தலைநகர்

நரசிங்க முனையரையர், திருநாவலூரில் பிறந்த நம்பி யாரூரர் என்னும் சுந்தரரைத் தம் செல்லப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார் எனப் பெரியபுராணம் தெரிவிக்கிறது.

[1]

*நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு

பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பி னாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப அன்பினால் மகன்மை கொண்டார்”

என்பது பெரிய புராணச் செய்யுள். இது வெற்றுப் புராணச் செய்தி மட்டுமன்று, திருநாவலூர் மக்களும் வாழையடி வாழையாகச் செவிவழி அறிந்து வைத்து இச் செய்தியைத் தெரிவிக்கின்றனர்.

மற்றும் சுந்தரருங்கூட, தமது தேவாரத்தில் திருநாவலூர்ப் பதிகத்தின் இறுதிப் பாடலில், நரசிங்க முனையரையர் திருநாவலூரில் இருந்து இறைபணி புரிந்தார்’ என்னும் செய்தியைத் தெரிவித்துள்ளார். அப் பாடல் வருமாறு:


"நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன்

ஆதரித்தீசனுக் காட்செயும் ஊர்அணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டன் ஆரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினைக் கட்டறுமே.”

‘திருநாவலூர், இறைவன் எழுந்தருளியுள்ள ஊராகும்; என்னுடைய ஊருமாகும்; நரசிங்க முனையரையன்


  1. *பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 5.