பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

கெடிலக்கரை நாகரிகம்


“பகாப்பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன்

குணபரன் மயேந்திரப் போத்தரசரு......."

இக் கல்வெட்டுப் பகுதியிலுள்ள மயேந்திரன் என்பது மகேந்திரனாகும். அவனைக் குறிக்கும் வேறுபெயர்கள்: பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்துரு மல்லன், குணபரன் என்பனவாம். இதிலிருந்து குணபரன் எனப்படுபவன் மகேந்திரனே என்பது நன்கு தெளிவாகும். இதற்கு இன்னும் ஒரு சான்று வருமாறு:

திருச்சி மலைக்கோயிலில் மலைக்குகை மண்டபத்தைக் குடைந்து உருவாக்கியவன் மகேந்திரனாவான். அம் மண்டபத்தின் தூண்களில் இவனைப் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு: [1]

இந்த வடமொழிக் கல்வெட்டுப் பகுதியின் கருத்தாவது: “குணபரன் என்னும் பெயருடைய அரசன், சமணத்திலிருந்து மாறிப் பெற்ற மெய்யறிவு உலகில் நெடிது நிலைப்பதாகுக!” என்பதாம். அப்பரால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையே இக் கல்வெட்டுப் பகுதி குறிக்கிறது.

மேற்காட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் மகேந்திர னுடையவை; எனவே, குணபரன் எனப்படுபவன் அவனே என்பதும், திருவதிகையில் குணபரேச்சரம் கட்டியவன் அவனே என்பதும், அப்பர் காலத்தில் வாழ்ந்தவன் அவனே என்பதும் முறையே ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாய்த் தெளிவுபடுகின்றன.

அப்பர் காலத்தில் ஆண்ட பல்லவன் மகேந்திரவர்மனே என்பது உறுதியாய் விட்டதால் அப்பர் காலத்தைக் கணிப்பது இனி எளிது. மகேந்திரவர்மன் கி.பி. 600ஆம் ஆண்டிலிருந்து 630ஆம் ஆண்டுவரை ஆண்டதாகப் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கால அட்டவணையிலிருந்து தெரியவருகிறது. அப்பர் இந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். மற்றும், அப்பருக்கு எண்பத்தொன்று’ என்று தொடங்கும் பாடலினால், அப்பர் எண்பத்தோ ராண்டுகள் உயிர்வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவர்
  1. *தென்னிந்தி சாசனங்கள் பக்கம் 29.