பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

கெடிலக்கரை நாகரிகம்


என்னும் பொதுப் பெயரில் மிளிர்கின்றன. எனவே, திருமுனைப்பாடி நாடு என்னும் நடுநாட்டு ஊர்கள் மேல் பாடப் பெற்றுள்ள தேவாரப் பதிகங்களைக் கெடிலக்கரை இலக்கியங்களாக நாம் கொள்ளலாம். மற்றும், இப்போது தேவாரங்களை அச்சிட்டிருப்பவர்கள் நாடு வாரியாகப் பதிப்பித்திருக்கிறார்கள். நடு நாட்டுப் பதிகங்கள் யாவும் ஒருசேரத் தொகுக்கப் பெற்றுத் தனியிடம் பெற்றுள்ளன. மூவர் தேவாரங்களிலும் உள்ள நடு நாட்டுப் பதிகங்கள் கெடிலக்கரை இலக்கியங்களே. இவற்றுள், காலத்தால் முற்பட்ட அப்பர் தேவாரப் பதிகங்கள் முதலில் வருமாறு:

அப்பர் தேவாரம்

நடு நாட்டில் அப்பர் தேவாரப் பாடல்கள் கிடைத்துள்ள ஊர்ப் பெயர்களும், அவற்றிற்கு நேரே அவ்வவ்வூர்க்கு உரிய மொத்தப் பதிக எண்ணிக்கையும், மொத்தப் பாடல் எண்ணிக்கையும், அவற்றையடுத்துப் பதிகமும் பாடலும் இத்தனையாவது திருமுறையைச் சேர்ந்தவை எனத் திருமுறை எண்ணும் முறையே கீழே தரப்படும். அப்பர் தேவாரம் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக வகுக்கப்பட்டிருத்தல் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

ஊர்
மொத்தப் பதிகம் மொத்தப் பாடல் திருமுறை எண்
திருவதிகை 16 158 4, 5, 6
திருப்பாதிரிப் புலியூர் 1 10 4
திருவாமாத்துர் 2 21 5, 6
திருமுண்டீச்சுரம் (கிராமம்) 1 9 6
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 10 4
திருவண்ணாமலை 3 30 4, 5
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) 1 10 6
திருத்துங்கானை மாடம் (பெண்ணாகடம்) 1 3 4
நெல்வாயில் அரத்துறை 1 10 5