பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

203



திருமாணி குழி 1 11 3
திருப்பாதிரிப் புலியூர் 1 11 2
வடுகூர் (திருவாண்டார் கோயில்) 1 11 1
திருவதிகை 1 11 1
திருவாமாத்துர் 2 22 2
திருநெல்வெண்ணெய் 1 11 3
திருக்கோவலூர் (வீரட்டம்) 1 11 2
அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்) 1 11 2
திருவண்ணாமலை 2 22 1
திருப்புறவார் பனங்காட்டுர் (பனையபுரம்) 1 11 2
திருவக்கரை 1 11 3
இரும்பை மாகாளம் 1 11 2
அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) 1 10 2

இந்த ஊர்களேயன்றித் திருத்தினை நகர் முதலிய நடுநாட்டு ஊர்கட்கும் சம்பந்தர் சென்று வழிபட்டதாகப் பெரிய புராணத்தால் தெரிகிறது. ஆனால், திருத்தினை நகர்ப் பதிகம் கிடைக்கவில்லை. கிடைத்திருப்பனவற்றுள்ளும் திருவெருக்கத்தம் புலியூர்ப் பதிகத்தில் ஒரு பாடலும், திருமுதுகுன்றம் பதிகங்களில் ஐந்து பாடல்களும், அரசிலி பதிகத்தில் ஒரு பாடலும் கிடைக்கவில்லை. தேவாரம் பதிப்பித்துள்ள முன்னோர்கள் திருவக்கரை, இரும்பை, அரசிலி ஆகிய மூன்று ஊர்ப் பதிகங்களையும் தொண்டை நாட்டுப் பதிகங்களில் சேர்த்துள்ளனர்; இருப்பினும், இந்த மூன்று ஊர்களும் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தைக் காட்டிலும் கெடிலக்கரைக்கு அண்மையில் இருப்பதால், கெடிலக்கரை பற்றிய இந்நூலில், இம் மூன்று ஊர்ப் பதிகங்களும் நடுநாட்டுப் பதிகங்களுடன் சேர்க்கப்பட்டன.

சம்பந்தர் தேவாரத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் பதினொரு பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தர் தேவாரத்தின் காலம் ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.