பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

211



“முன்னிவ் வுலகாண்ட மூர்த்தியைக் கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை”

எனவும் கோவலூரைப் பாடியுள்ளார்.

திருவயிந்திரபுரம்

திருமங்கை யாழ்வாரின் பெரிய திருமொழியில் மூன்றாம் பத்தில் ‘இருந்தண்’ என்று தொடங்கும் முதல் திருமொழி திருவயிந்திரபுரத்தைப் பற்றியதாகும். இதிலுள்ள பத்துப் பாக்களில், திருவயிந்திரபுரத்தின் இயற்கை வளமும் இறைவனின் மாண்பும் பரக்கக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்கு முதல் பாடல் வருமாறு:

செஞ்சுருட்டி ராகம் - ஆதி தாளம்

“இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கிக்
கருந்தண் மாகடற் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி இன்னிசை முரன்றெழு மளிகுலம்
பொதுளியம் பொழிலுடே
செருந்தி நாண்மலர் சென் றணைந் துழிதரு
திருவயிந் திரபுரமே”

திருமங்கை யாழ்வார் காலம் எட்டாம் நூற்றாண்டாகும். எனவே, அவர் படைப்புக்கள் எட்டாம் நூற்றாண்டு இலக்கியங்களின் வரிசையில் இடம்பெறும்.

பிற ஆழ்வார்கள்

நடுநாட்டுத் திருப்பதியாகிய திருக்கோவலூரைத் திருமங்கை யாழ்வரேயன்றிப் பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார் முதலியோரும் போற்றிப் பாடியுள்ளனர். முதலாழ்வார்கள் எனச் சிறப்பிக்கப்படும் மூவருள் முதல்வரும் காஞ்சியுரம் திருவெஃகாவில் பிறந்தவருமாகிய பொய்கை யாழ்வார் தாம் இயற்றிய ‘முதல் திருவந்தாதி’ என்னும் நூலில் (பா : 86),

“நீயுந் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப்
பாயும் பனிமறைத்த பண்பாளா - வாயில்
கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி”

எனக் கோவலூரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாமவரும் மாமல்லபுரத்தில் தோன்றியவருமாகிய பூதத்தாழ்வார் தாம் அருளிய இரண்டாந்