பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கெடிலக்கரை நாகரிகம்


மேல் அன்புப் பாடல்கள் பாடியுள்ளார். மூவர் பாடலுக்கும் தேவாரம் எனப் பெயர் வழங்கப்படுதல்போல, அருணகிரிநாதர் பாடலுக்குத் ‘திருப்புகழ்’ எனப் பெயர் வழங்கப்படுகிறது. முருகனது அழகிய - மங்கலமான தெய்வத்தன்மை மிக்க - வளவிய புகழைக் கூறும் பாடல் ஆதலின் ‘திருப்புகழ்’ எனப்பட்டது. திருப்புகழ் என்பது, தேவாரம் போலவே, அருணகிரிநாதர் பல காலங்களில் பலவிடங்களில் பாடிய பல பாடல்களின் தொகுப்பேயாகும்.

திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து உருவான அருணகிரிநாதர் நடுநாட்டில் உள்ள பல ஊர்கட்கும் சென்று முருகனை வழிபட்டுத் திருப்புகழ் பாடியுள்ளார். தேவார ஆசிரியர்கள் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்கள். பாடியிருப்பதைப்போல அருணகிரிநாதர் பாடவில்லை; ஒவ்வோர் ஊர்மேலும் தனித்தனியாக ஒரு பாடலோ இரு பாடல்களோ, நான்கு பாடல்களோ, இன்னும் பல பாடல்களோ பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் அவ்வவ்வூர்ப் பெயர் இருக்கும். இனி, அருணகிரியார் நடுநாட்டில் திருப்புகழ் பாடியுள்ள ஊர்ப்பெயர்களும் ஒவ்வோர் ஊர்க்கும் உரிய மொத்தப்பாடல் எண்ணிக்கையும் முறையே வருமாறு:

ஊர் மொத்தப் பாடல்
திருவண்ணாமலை 78
மயிலம் 1
திருவக்கரை 1
திருவாமாத்துார் 4
திருக்கோவலூர் 1
திருத்துறையூர் 1
திருவதிகை 2
திருவாமூர் 1
திருப்பாதிரிப் புலியூர் 1
திருமாணிகுழி 1
வடுகூர் (திருவாண்டார் கோவில்) 1
திருநாவலூர் 1