பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

கெடிலக்கரை நாகரிகம்


மஞ்சக்குப்பம் 199 - 200.

செயின்ட் டேவிட் கோட்டை 84.

எய்தனூர் 141 - 147.

திருச்சோபுரம் 109 - 114.

திருத்தினைநகர் 115 - 127.

வழுதலம் பட்டு 223 - 224.

வேங்கடாம் பேட்டை 140; 366 - 370.

திருவயிந்திரபுரம் 85 - 109; 136 - 137, 243 - 257,

திருக்கண்டேசுரம் 128 - 151.

திருமாணிகுழி 148 - 170

திருவதிகை 28 - 60; 358 - 419

திருத்துறையூர் 207; 421 - 436

திருவாரூர் 131 - 139.

இவ்வூர்களிலேயன்றி, நடு நாட்டைச் சேர்ந்ததும் முன்பு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருந்ததும் இப்போது வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருப்பதுமாகிய திருவண்ணாமலையிலும் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. கடலூருக்கு அண்மையிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடலூர் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற பாகூர் முதலிய ஊர்களிலும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதுகாறுங் கூறிவந்த எல்லாக் கல்வெட்டுகளும் நடுநாட்டைச் சேர்ந்த செல்வங்களே, நடுநாட்டுக் கல்வெட்டு இலக்கியங்களின் மாதிரிக்காக உரைநடைக் கல்வெட்டு ஒன்றும் செய்யுள் நடைக் கல்வெட்டு ஒன்றும் காண்போம்:

உரைநடை

(கெடில வடகரை - திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலில் உள்ளது.)

பல்லவ பரமேச்வர வர்மன் - 8ஆம் நூற்றாண்டு

ஸ்வஸ்தி பூர் பரமேச்சுரப் போத்தரையர்க்கு யாண்டு மூன்றாவது, அவினூர்த்திரு அகத்தீச்வரத்து மஹாதேவர் அடியான் மணியன் திருப்பணி போவதற்கும் திரு அமிதுக்கும் ஒட்டிப் பொலியூட்டு வைத்த பரிசாவது கொறுத்தலை நாச்சன் மண்டை யாழ்வா. ரேத்தது மகிழரேத்தது மேல் உடைய அஞ்னுாற்றுக் காடியும் ஊருணி அகத்துப்