பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுக் கல்வெட்டுகள்

235


பொற்குன்றச் சடங்கவியாரேத்தது மேலை பிராயசெறு வின்றலை றலை உடைய கலம் நெல்முப்பதின் காடியும் பொன் கழஞ்சும் இச் செறுவினுள் பொற்றத்தனார் கூறாயதும் கொடுஞ் செறுவு தலச்சமாடாக நெல் அஞ்பதின் காடிக்கும் பொலி ஊட்டுண்ண உடையது கொறுத்தலை பொற்க்கத்தியார் மகனிடை ஊருணி அகத்து கையீடொற்றி உடைய கலம் பொன் அறு கழஞ்சும் நெற்பதினாற் காடியும் கையீடொற்றி கொறுத்தலைப் பொற்றாழியார்ரிடை ஊருணி அகத்துக் கொண்டனங்குழி இவருடைய நிலத் தின்றலையும் கருப்பெத்தது இவருடைய மூன்று செறுவின் றலையுமாக உடைய கலம் அறுகழஞ்சும் நெல் அறுபதின் காடியும் மிக்கொண்டணங்குழி நடுவில் இரண்டு குழியின்றலையும் கொண்டணங் கிழவர் போழ நன்தியாரிடை உடைய நாற்பதின் காடி நெல்லும் பிண்டி ஊட்டிப் பட்டித் தேவபூதி அங்கமணி பெற்ற செறுவின்றலை உடைய நெல் நாநாற்பதின் காடியும் கொறுத்தலைப் பொற்கத்தியார் மகநிழுக்கங் காட்டுப்பட்டி நிலத்திலும்.லமான பட்டித்தலை உடைய அஞ்ஞாற்றுக்காடியும் கொறுத்தலைப் பொன்னிலனா ரேதத்துப்பட்டி நிலந் தலைச்சை மாடாக உடைய நெல் அஞ்னுாற்றுக் காடியும் அழிசுப் பொற்றிண்டத் திருவேதியார் தலைப் பாடகத்து ஆறு செறுவின்றலை உடைய கலம் அறு கழஞ்சு பொன்னும் இவரிடயே வடபாலை பள்ளச் செறுவின்றலை முப்பதின் காடி நெல்லும் பொலி ஊட்டு அழிசூர் சிற்றயன் தலைப்பாடகத்து மூன்று செறுவின்றலையும் அறுபதின் காடி நெல்லாலும் பதின் அஞ் காடி நெல்லும் பொலி ஊட்டுவதாகவும், இன் நெல் முதலால் பதின் காடியால் ஒரு காடி நெல் பொலி ஊட்டுவதும் பொன் கழஞ்சின் வாய் அறு கால் நெல் பொலி உண்பதாகவும் சபையும் பன்மாஹேச்வரரும். இத் தர்மம் ரrவித்தார் அடி என் தலை மேலன. கால்கடு தட்டம்.”

செய்யுள்

(கெடிலக் கீழ்கரை - திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. தென்னிந்தியச் சாசனத் தொகுதி ஏழு).