பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டு வளங்கள்

243


போல் கட்டி கட்டியாக வெட்டி எடுக்கப்படும் இம் மண், உரத்தொழிற்சாலைகட்குக் கொண்டுபோகப்பட்டு மணிலா பிண்ணாக்கு, மாட்டெலும்பு முதலியவற்றுடன் கலக்கப்பட்டு உரம் உண்டாக்க உதவுகிறது. மற்றும், வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகள், நெல்லிக்குப்பம் வெற்றிலை, பண்ணுருட்டிப் பலாப்பழம் முதலியவை பெயர் பெற்றவை.

நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வனேடியம், கெலேனியம், தோரியம், நிலத்தடி எண்ணெய் முதலிய வளங்கள் ஒரு புறமிருக்க, - கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி வந்தவர்க்கெல்லாம் தன் உடைமைகளையெல்லாம் வரையாது வாரி வாரி வழங்கிய கொடைவளம் மிக்கிருந்த நாடு கெடில நாடு என்பதற்கு மேல் இன்னும் என்ன கூறிக் கெடிலநாட்டு வளத்தைச் சிறப்பிக்க வேண்டும்? இங்கே பின்வரும் [1]திருக்குறள்களை நினைவு செய்து கொண்டால் போதும்:

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் ::இல்லவள் மாணாக் கடை"
"இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
  1. திருக்குறள் - 53, 1040.