பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

257


தொலைவில் அரியூர் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே ஆற்றில் பாலம் உள்ளது. இந்த அரியூர்ப் பாலம் இந்த வட்டாரத்தில் போக்குவரவுக்கு மிகவும் இன்றியமையாததாகும். -

இங்கே பாலத்தைக் கடந்ததுமே ஆற்றின் தென் கரையில் பாதை இரண்டாகப் பிரிகிறது. அப்படியென்றால், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி - அஃதாவது திருக்கோவலூரை நோக்கி வந்து கொண்டிருக்கும் இன்றியமையாத இரண்டு மாவட்ட நெடும்பாதைகள் இங்கே அரியூர்ப் பாலத்தின் அருகில் ஒன்று கூடுகின்றன என்றும் சொல்லலாம்.

இவ்வாறு திருக்கோவலூரிலிருந்து வந்து அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் இரண்டாகப் பிரிந்த பாதைகளுள் மேற்குப்பாதை, தென்மேற்காகச் சென்று கள்ளக்குறிச்சி வட்டத்திற்குள் புகுந்து ரிஷிவந்தியம் என்னும் ஊரைக் கடந்து தெற்குநோக்கி வளைந்து சென்று தியாக துருக்கம் என்னும் ஊருக்கு அருகில், கள்ளக்குறிச்சி வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையுடன் (State Highways) சேர்ந்து விடுகிறது. மேற்குப் பாதை இப்படியென்றால், கிழக்குப் பாதையோ, தென்கிழக்காகச் சென்று இறையூர் என்னும் ஊருக்கருகில் மீண்டும் தெற்கு நோக்கி வளைந்து எலவானாசூர்க்கோட்டை வழியே ஆசனூர் என்னும் ஊர் வனர சென்று, சென்னையி லிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் செல்லும் பெரு நாட்டு நெடுஞ்சாலையுடன் (National Highways) கூடி விடுகிறது.

அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் பிரியும் இந்த இரு பாதைகளும் நோக்கிச் செல்லும் குறி ( இலக்கு) இத்தகையது என்றால், அரியூர்ப் பாலத்தின் இன்றியமையாமை எத்தகையது என்பது புலனாகுமே!

களமருதூர் அருகில்

திருவெண்ணெய் நல்லூர்ப் பக்கத்திலிருந்து களமருதுார் வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று இவ்விரண்டு ஊர்கட்குமிடையே கெடிலத்தைக் கடக்கிறது. ஆற்றுக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் களமருதூர் உள்ளது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. இந்தப் பாதை தெற்கு நோக்கிச் சென்று கீரனூருக்கருகில் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலையுடன் சேர்கிறது.

சேர்ந்த மங்கலம் அருகில் (பாலம்)

சென்னையிலிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் சென்றுகொண்டிருக்கும் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலை,